வவுனியா வடக்கில் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிற்கு தடுப்பூசி வழங்கல்
வவுனியா வடக்கில் இன்று கோவிட்- 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் முதற்கட்டமாக வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் உள்ள 76 பாடசாலைகளைச் சேர்ந்த 1000 ஆசிரியர்களிற்குத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 60 வயதிற்கு மேற்பட்ட 500 பேருக்கு இன்றையதினம் புளியங்குளம் மற்றும் நெடுங்கேணி வைத்தியசாலைகளில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவம் மற்றும் வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் வவுனியா வடக்கு வைத்திய அதிகாரி வி.திலீபன், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மேஜெயா, சுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டு தடுப்பூசி ஏற்றும் பணியை ஆரம்பித்து வைத்துள்ளனர் .




Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2! 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? Manithan