கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றல்
கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது மட்டக்களப்பு சுகாதார வைத்தியர் அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினருக்கு கொவிட் - 19 தடுப்பூசி எற்றும் நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸாருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டு பகுதி பகுதியாக இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்போது கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.







