வடமாகாணத்தில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி பணிகள்
வடமாகாணத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இராணுவத்தினராலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுகாதார திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவில்லை என்று வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் வவுனியா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (05) இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு மாவட்டங்களான கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இராணுவத்தினரால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்றைய தினம் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.
இவ்விடயம் குறித்து வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எனினும் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம். மகேந்திரனிடம் தொடர்பு கொண்டு வவுனியாவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்று வினவியபோது, இவ்விடயம் குறித்து வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரிடம் கேட்டறிந்து கொள்ளுமாறு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
