கோவிட் தொற்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய வழங்கியுள்ள தீர்வு
கோவிட் நோய்த் தொற்று பரவுகையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு தடுப்பூசியேயாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோவிட்டை இல்லாதொழிக்கும் இறுதித் தீர்வு மக்களுக்குத் தடுப்பூசி வழங்குவதே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் சவாலை வெற்றிகொள்ள வேண்டுமாயின் கோவிட் முதலாம் அலையில் செயற்பட்டது போன்று அனைவரும் சுகாதார விதிகளை முழு அளவில் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நான்கு வகையான கோவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடு ஒன்றில் கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு முடக்க நிலையை அறிமுகம் செய்வது குறுகிய காலத்திற்கு வெற்றியளித்தாலும் நீண்ட காலத்திற்குப் பொருந்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய பொருளாதார பின்னடைவைத் தடுக்க வேண்டுமாயின் முடக்க நிலையோ அல்லது ஊரடங்குச் சட்டமோ அமுல்படுத்தகூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
