கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளரின் தகவல்
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது தொடக்கம் 19 வயது வரையான நாட்பட்ட நோயுடைய மாதாந்த சிகிச்சை பெறுகின்றவர்கள், உளநலம் பாதிக்கப்பட்டவர்கள், உள நலம் குன்றியவர்கள் ஆகியோருக்கு பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகிறது.
இந்த விடயத்தை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் செல்வராஜா சுகந்தன் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பணிகள் நேற்று முதல் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் மாதாந்த
சிகிச்சை, உளநல சிகிச்சைக்கு செல்லும் சிறுவர்கள் குறித்த தடுப்பூசியைப்
பெற்றுக் கொள்ள முடியும் எனக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர்
தெரிவித்துள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 36 நிமிடங்கள் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
