எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 60 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்படும் - அரசாங்கம்
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 60 வீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 வீதமான மக்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாத்திற்குள் தடுப்பூசிகள் ஏற்றப்படும் என்பதனை பொறுப்புடன் கூறுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யாவின் ஸ்புட்னிக், கொவிஷீல்ட், பைசர் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப் பெற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் மாதம் முதல் இந்த தடுப்பூசிகள் கிடைக்கப் பெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இடைநிறுத்தப்படாது தொடர்ச்சியாக நாட்டு மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
