மருத்துவ நிபுணர்களின் பதவி வெற்றிடங்கள் :நெருக்கடியில் சுகாதார துறை
மருத்துவ நிபுணர்களின் பதவி வெற்றிடங்கள் பாரிய பிரச்சினையாகவுள்ள நிலையில் இலங்கையில் பணிகளில் உள்ள பதினொரு குழந்தைகளுக்கான இருதயநோய் நிபுணர்களில் ஆறு பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த வெற்றிடங்களை முழுமையாக சீர்செய்ய இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும் என்று எதிர்வுகூரப்பட்டுள்ளது.
இருதயநோய் நிபுணர்களின் நிலையான எண்ணிக்கை
தரவுகளின்படி, இலங்கையில் முழுத்தகுதி பெற்ற குழந்தைகள் இருதயநோய் நிபுணர்களின் நிலையான எண்ணிக்கை இருபதாக இருக்க வேண்டும்.
இருப்பினும், தற்போதைய எண்ணிக்கை பதினொன்றாக மட்டுமே உள்ளது.அதிலும் தற்போது 6 பேர் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
தற்போது, குழந்தைகளுக்கான சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை, சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் மருத்துவமனை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் குருநாகல் போதனா மருத்துவமனை ஆகியவற்றில் ஐந்து முழுத்தகுதியுள்ள சிறுவர் இருதயநோய் நிபுணர்கள் மட்டுமே சேவையில் உள்ளனர்.
மருத்துவ நிபுணர்களின் வெற்றிடங்கள் இலங்கையில் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருப்பதால், சுகாதார அதிகாரிகள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
