சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி வீ.ஆனந்தசங்கரி கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்
நடமாடும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி வீ.ஆனந்தசங்கரியும் 88வது வயதில் இன்று சினோபாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார்.
நேற்று முதல் வயது முதிர்ந்தவர்கள், நடமாட முடியாதவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருப்போர் உள்ளிட்டோருக்கு நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி சரவணபவனின் நேரடி கண்காணிப்பின் கீழ் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், குறித்த நடமாடும் தடுப்பூசி செலுத்தும் சேவை ஊடாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 50 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்துவதற்காகக் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் 9 இடங்களிலும், நடமாடும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஊடாகவும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்ற வருகின்றது.
30 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் குறித்த தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இடம்பெறுகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் நடமாடும் சேவை ஊடாக 88 வயதுடைய வீ.ஆனந்தசங்கரி தடுப்பூசியைக் கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பெற்றுக்கொண்டார்.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam