17 நாட்களாக சுரங்கப்பாதையில் உயிருக்கு போராடும் 41 பேர்: மீட்கும் முயற்சிகள் தீவிரம்
கடந்த 17 நாட்களாக இந்திய - உத்தரகாண்டின் சில்க்யாரா, பர்கோட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
இவ்வாறு சிக்கித்தவிக்கும் 41 பேரையும் விடுவிப்பதற்கான அவசர முயற்சியில் செங்குத்து மற்றும் கிடைமட்ட துளையிடும் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் எலி துளை சுரங்கத்தொழிலாளர்கள் குழு ஒன்று, இடிபாடுகள் வழியாக கைமுறையாக கிடைமட்ட துளையிடலைத் தொடங்கியுள்ளது.

மேம்பட்ட துளையிடும் இயந்திரம் செயலிழந்ததால், செயல்முறையை விரைவுபடுத்த கையால் துளையிடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சவால்களை தவிர்த்து, நவம்பர் 30 ஆம் திகதிக்குள் செங்குத்து துளையிடுதலை முடிக்க அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
சவுதி அரேபியா மீது ஈரான் ஆதரவுப்படைகளால் இருமுனைத் தாக்குதல்: நெருக்கடியில் மத்திய கிழக்கு News Lankasri