யாழில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த தொழிநுட்பக் கல்லூரி! புலம்பெயர் மக்களிடம் விசேட அழைப்பு (Video)
யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தொழிநுட்பக் கல்லூரியில் துறைசார்ந்த கற்கைநெறிகளை கற்கும் மாணவர்கள் பழைய கருவிகளை உபயோகித்து வருகின்ற நிலையில் அவற்றை நிவர்த்தி செய்ய முன்வருமாறு ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடக குழுமத்தின் தலைவரான கந்தையா பாஸ்கரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
புலம்பெயர்ந்தோரின் உதவியில் தொழிநுட்பக் கல்லூரிக்கு தேவையான இலத்திரனியல் பொருட்கள் வழங்கி வைக்கின்ற வைபவத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதேவேளை, கொழும்பில் உள்ள நிறுவனமொன்று நவீன மயப்படுத்தப்பட்ட குழாய் பொருத்துதல் தொழிநுட்ப (பிளம்பிங்) வகுப்பறை ஒன்றை அமைப்பதற்கு முன்வந்துள்ளது.
இந்த உதவியை செய்ய முன்வந்துள்ள குறித்த நிறுவனத்திற்கும், இதற்கு முன்னர் பல உதவிகளை செய்தவர்களுக்கும் அவர் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும், 75 ஆண்டுகள் பழமையான இந்த தொழிநுட்பக் கல்லூரியில் கற்கும் மாணவர்கள் 25 வருட பழமையான கருவிகளை கூட பாவித்து வருகின்றனர்.
துறைசார் கற்கைநெறிகளுக்கு போதியளவு கருவிகள் இல்லாத நிலையும் அங்கிருக்கிறது. இவ்வாறாக இருக்கும் இந்தக் கல்லூரியை மீள் நிர்மாணிக்க, அங்கு கற்கும் மாணவர்களை அறிவுத்திறன் கொண்டவார்களாக உருவாக்க, கருவிகளை பெற்றுக்கொடுக்க உதவிகளை செய்ய முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
















அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
