புடினை கொல்ல உக்ரைன் அனுப்பிய இரகசிய ட்ரோன் விமானம்: அம்பலப்படுத்திய ஜேர்மன்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்ய உக்ரைன் உளவுத்துறை ட்ரோன் விமானமொன்றினை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
இருப்பினும் இந்த ட்ரோன் விமானம் பாதி வழியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஜேர்மன் ஊடகமொன்று அம்பலப்படுத்தியுள்ளது.
உக்ரைன் உளவுத்துறை 17 கிலோ வெடிப்பொருட்களுடன் UJ-22 ரக ட்ரோன் விமானத்தை கடந்த ஞாயிறன்று அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
உக்ரைன் நிர்வாகம் மறுப்பு
ரஷ்யாவின் தொழிற்பேட்டைக்கு புடின் வருகை தர உள்ளதாக தகவல் வெளியான நிலையில் புடினை படுகொலை செய்ய உக்ரைன் உளவுத்துறை ட்ரோன் விமானமொன்றினை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே உக்ரைன் தரப்பு புடினை படுகொலை செய்யும் நோக்கத்துடன் ட்ரோன் விமானத்தை அனுப்பியுள்ளது.
இந்த ட்ரோன் ரஷ்ய பாதுகாப்பு வட்டத்தில் சிக்காமல், உரிய இலக்கை நெருங்கிய நிலையிலேயே விபத்தில் சிக்கியுள்ளதாக கூறுகின்றனர்.
இருப்பினும், ஜேர்மன் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த தகவலை உக்ரைன் நிர்வாகம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.