கொழும்பில் இருந்து கண்டிக்கு செல்வோர் முக்கிய அறிவித்தல்
மண்சரிவு ஆபத்து காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதியின் மாவனெல்லை நகரில் இருந்து பேராதனை சந்தி வரையான பகுதி மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த பாதையை பயன்படுத்தி கண்டிக்கு செல்லும் வாகனங்கள் மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனடிப்படையில், கண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் அம்பேபுஸ்ஸ சந்தியில் திரும்பி, குருணாகல், மாவத்தகமை, கலகெதர, கட்டுகஸ்தோட்டை வழியாக கண்டிக்கு செல்ல முடியும். மேலும் கொழும்பில் இருந்து கண்டிக்கு செல்லும் வாகனங்கள் மாவனெல்லை எஸ். ஓ சந்தியில் இது பக்கம் திரும்பி, ஹெம்மாத்தகமை வழியாக கண்டிக்கு செல்ல முடியும்.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கு வரும் வாகனங்களும் இந்த மாற்று வழியை பயன்படுத்துமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடுகன்னாவை பழக்கடைகள் அமைந்துள்ள பிரதேசம் மண்சரிவு ஆபத்துக்கு உள்ளாகி இருப்பதாக தேசிய கட்டடங்கள் மற்றும் ஆய்வு அமைப்பு அறிவித்தமைக்கு அமைய நேற்றைய தினம் இரவு 10 மணி முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அந்த பகுதி மூடப்பட்டுள்ளது.
இதனிடையே கடுகன்னாவை கற்சுரங்கம் அமைத்துள்ள 98 கிலோ மீற்றர் தூண் பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என கட்டடங்கள் மற்றும் ஆய்வு அமைப்பின் கேகாலை மாவட்ட அதிகாரி நிமாலி வீரங்க தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 8 மணி நேரம் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
