பெண் உறுப்பினரிடம் தகாத வார்த்தைப் பிரயோகம்: கல்வி அமைச்சர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை
பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது தகாத வார்த்தையைப் பிரயோகப்படுத்தியமைக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன (Rohini Kaviratne) எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும் போதே பிரேமஜயந்த குறித்த வார்த்தை பிரயோகத்தைப் பயன்படுத்தினார் என்று முறையிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திலிருந்த கெமரா அமைச்சரிடமிருந்து விலக்கியபோதும் அமைச்சர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியபோது, அவரது ஒலிவாங்கி இயங்கிக்கொண்டிருந்தது.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன சபாநாயகர் மஹிந்த யாப்பா
அபேவர்தனவிடம் இந்த விடயத்தை முன்வைத்து, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீது
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
