உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(21) நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றையதினம் 292.29 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி இன்றையதினம் 292.83 ரூபாவாக அதிகரித்துள்ளது.
விற்பனை பெறுமதி
இந்த நிலையில், நேற்றையதினம் 300.81 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது இன்றையதினம் 301.33ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358.40 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 372.22 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302.31 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 314.83 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. க
னேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.65 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 210.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180.97 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 190.41ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
