இலங்கை தமிழர்கள் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவித்தல்!
தமது நாட்டில் வெளிநாட்டுக்கொள்கையின்படி இலங்கையின் மனித உாிமைகள் விடயம் மிக முக்கியானது என்று அமொிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய உதவி ராஜாங்க செயலாளர் டொனால்ட் லுா, இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலக தமிழர் பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்புக்களின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கான சமாதானத் தேடலிலும், நாட்டின் எதிர்காலத்துக்கான தீர்மானக் குரலிலும் தாம் இணைந்துக்கொள்வதாக டொனால்ட் லுாவை கோடிட்டு அமொிக்க ராஜாங்க திணைக்களத்தின் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம் ஏ சுமந்திரன், சாணக்கியன் மற்றும் உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள், தெற்காசிய பிராந்திய உதவி ராஜாங்க செயலாளர் டொனால்ட் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் உட்பட்டவா்களுடன் மேற்கொண்ட சந்திப்புக்களை அடுத்தே அமொிக்காவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

