அமெரிக்காவில் இலட்சக்கணக்கான குழந்தைகளை பாதித்த கொரோனா
அமெரிக்காவில் இதுவரை 72 லட்சம் குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி அமாி்க்காவில் கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்படும் அளவு, 1 லட்சம் குழந்தகளுக்கு 9 ஆயிரத்து 562 பேர் என்னும் அளவில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவின் மொத்த கொரோனா பாதிப்பில் 17.2 சதவீதத்தினர் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது..
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், ஒரு லட்சத்து 64 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது, அதற்கு முந்தைய வார கொரோனா பாதிப்பை விட 24 சதவீதம் அதிகமாகும்.
இந்தநிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து 18வது வாரமாக 1 லட்சத்துக்கும் அதிகமாக குழந்தைகளின் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
எனினும் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 0.27 சதவீதத்தினர் மட்டுமே குழந்தைகளாவர்.
அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவ கல்லுாரி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் ஆகியன இணைந்து இந்த தகவல்களை வெளியிட்டுள்ளன.
