''திராட்சைத்தோட்ட" விற்பனை- மனைவிக்கு எதிராக நீதிமன்றம் சென்ற அமெரிக்காவின் முன்னணி நடிகர்!(வீடியோ)
பல மில்லியன் சொத்து விற்பனை- மனைவிக்கு எதிராக நீதிமன்றம் சென்ற அமெரிக்காவின் முன்னணி நடிகர்! அமெரிக்காவின் விருதுகள் பல பெற்ற முன்னணி திரைப்பட நடிகர் பிராட் பிட் (Brad Pitt ) தனது முன்னாள் மனைவி ஏஞ்சலினா ஜோலிக்கு எதிராக சொத்து தொடர்பில் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இருவரும் திருமண முறிவுக்கு முன்னர் கொள்வனவு செய்த பிரான்ஸில் அமைந்துள்ள திராட்சைத் தோட்டத்தை தமது முன்னாள் மனைவியான ஏஞ்சலனா ஜோலி விற்பனை செய்தமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் ஒன்றாக 2008 ஆம் ஆண்டில் இந்த திராட்சைத் தோட்டத்தை 25 மில்லியன் யூரோக்களுக்கு கொள்வனவு செய்தனர்.
இதன்போது இருவரும் ஒருவரொருக்கு ஒருவர் தெரியாமல் இந்த தோட்டத்தை விற்பனை செய்வதில்லை என்று உறுதியை எடுத்துக்கொண்டனர்.
எனினும் 2018 திருமண முறிவுக்கு பின்னர் ஜோலி, குறித்த தோட்டத்தை ரஸ்ய பொதுமகனுக்கு விற்பனை செய்துள்ளார்.
தென்கிழக்கு பிரான்சில் உள்ள கோரன்ஸ் கிராமத்தில் இந்த திராட்சைத் தோட்டம் அமைந்துள்ளது



