ரஸ்ய ஜனாதிபதி புடின் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கு அமரிக்காவும் கனடாவும் தடை விதித்தன
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு எதிராக தடை விதிப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் இணையவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது
வெள்ளியன்று இடம்பெற்ற நாளாந்த செய்தி மாநாட்டில் கருத்துரைத்த ஊடகச் செயலாளர் ஜென் சாகி, "ஐரோப்பிய நட்பு நாடுகளின் முடிவோடு இணக்கமாக", புடின், லாவ்ரோவ் மற்றும் ரஸ்ய தேசிய பாதுகாப்புக் குழுவின் பிற உறுப்பினர்களுக்கு அமெரிக்கா தடைவிதிக்கும் என்று குறிப்பிட்டார்;
.எனினும் புடின் மற்றும் லாவ்ரோவ் மீது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விதித்துள்ள சொத்து முடக்கத்துக்கு அப்பால், அமெரிக்கா அவர்களுக்கு பயணத் தடையையும் விதிக்கும் என்று ஜென் சாகி அறிவித்துள்ளார்.
இதேவேளை பொருளாதாரத் தடைகள் குறித்த கூடுதல் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் சாகி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து தமது நாடும் பொருளாதார தடைகளை விதிக்கும் என்று கனேடிய பிரதமர் அறிவித்துள்ளார்.
ரஸ்யாவின் படையெடுப்பிற்கு ஆதரவு அளித்ததால் பெலாரஸ் தலைவர்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.