அமெரிக்க நிறுவனத்திற்கு 40 வீதப்பங்கு: சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை
“யுகதனவி“ மின்சார நிலையத்தின் 40 வீதப்பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணை செய்ய ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வை நியமிக்க வேண்டும் என சட்டமா அதிபர் கோரியுள்ளார்.
இது தொடா்பான அடிப்படை உரிமைகள் மனு இன்று பாிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் சார்பில் மேலதிக மன்றாடியார் நாயகம் பாா்ஸனா ஜெமீல் இந்தக் கோாிக்கையை முன்வைத்துள்ளார்.
இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்ற வகையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாக அவா் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மூவர் சார்பாக இது தொடர்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பதினாறாவது மே பதினெட்டு 1 மணி நேரம் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
