தவறான குற்றச்சாட்டில் 26 ஆண்டுகள் சிறையிலிருந்தவருக்கு முழு மன்னிப்பு
அமெரிக்காவின் வட கரோலினாவில் தவறான அடிப்படையில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு 26 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு ஆளுநரால் முழு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
டொண்டே ஷார்ப் (Dontae Sharpe) என்ற இவர், 1994ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதில் இருந்து தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க போராடிய நிலையில் கடந்த 2019இல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து தற்போது முழுமை மன்னிப்பைப் பெற்றுள்ள அவர் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
தம்மீதும் தமது குடும்பம் மீதும் இதுவரை காலமாக சுமத்தப்பட்டிருந்த சுமை, இந்த முழுமை மன்னிப்புடன் இறக்கிவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மன்னிப்பை அடுத்து டொண்டோ ஷாா்ப் (Dontae Sharpe) மாநில அரசாங்கத்திடம் இருந்து இழப்பீட்டை கோர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 3 மணி நேரம் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
