மத்திய தரைக்கடலில் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் இரகசியமாக நுழைந்த போர்க்கப்பல்! பேரழிவு ஏற்படலாமென எச்சரிக்கை
அமெரிக்க மரைன் வீரர்களை (Marine soldiers) ஏற்றிச்செல்லும் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் டிரிபோலி, தற்போது மத்திய தரைக்கடலில் இரகசியமாக நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன
யுஎஸ்எஸ் டிரிபோலி தற்போது எங்கு நங்கூரமிட்டுள்ளது என்பதும் இதுவரை வெளியிடப்படவில்லை என வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தரைவழி போருக்கான எச்சரிக்கை
யுஎஸ்எஸ் டிரிபோலி கப்பலில் 2,200-க்கும் மேற்பட்ட மரைன் வீரர்கள் இருப்பதாகவும், மேலும் அக்கப்பலில் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் வார்ஹாக் போர் விமானங்களும் இருப்பதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க இராணுவத்தின் ஐந்தாவது மற்றும் ஏழாவது கடற்படைகளும் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ளன, மேலும் இந்த படைகளை சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கை சுமார் 40,000 என்று கூறப்படுகின்றது.
இருப்பினும், அமெரிக்கப் போர் துறை இவற்றில் எதையும் உறுதிப்படுத்தவில்லை. தரைவழிப் போருக்காக அமெரிக்கப் படைகளை ஈரானுக்குச் செல்லுமாறு ட்ரம்ப் உத்தரவிட்டால், அது ஒரு பேரழிவாக இருக்கும் என்று சில இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மலைகளால் சூழப்பட்ட ஈரானின் அமைவிடம், அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் பாதகமாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.