ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்

United States of America Iran Middle East
By Shadhu Shanker Mar 13, 2026 01:22 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

ஈரானின் Islamic Revolutionary Guard Corps (IRGC) கடற்படை, தாங்கள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் அமெரிக்காவின் விமானம் தாங்கி செல்லும் போர்க்கப்பல் USS Abraham Lincoln மீது தாக்கி அதை செயலிழக்கச் செய்து, வளைகுடா நீர்ப்பரப்பிலிருந்து பின்வாங்கச் செய்ததாகக் தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்கா இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, அந்தப் போர்க்கப்பல் தொடர்ந்து Operation Epic Fury நடவடிக்கையை ஆதரித்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

ஈரானின் புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை..பெஞ்சமின் நெதன்யாகுவின் பகிரங்க எச்சரிக்கை

ஈரானின் புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை..பெஞ்சமின் நெதன்யாகுவின் பகிரங்க எச்சரிக்கை

போர்க்கப்பல்கள்

பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக மிகப்பெரிய வான்வழி தாக்குதலை ஆரம்பித்ததையடுத்து, அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு இரண்டு விமானம் தாங்கி செல்லும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.

USS Gerald R. Ford,USS Abraham Lincoln எனும் இரண்டு கப்பல்களே அவை.

ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம் | Us Warship Abraham Lincoln Hit By Iran Strike

ஒரு ஈரானிய கப்பல் அமெரிக்க விமானம் தாங்கி செல்லும் போர்க்கப்பலுக்கு மிகவும் அருகில் வந்ததாகவும், அதற்கு அமெரிக்க படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்தக் கப்பல் தாக்கப்பட்டது என உறுதியாகத் தெரியவில்லை என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் புனித நபி மைய தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், மேம்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்திய துல்லியமான நடவடிக்கையில் USS Abraham Lincoln போர்க்கப்பல் ஈரானின் கடல் எல்லையிலிருந்து சுமார் 340 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Sea of Oman பகுதியில் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

துபாயில் ஈரானிய ஏவுகணைகளைப் படம் பிடித்த பிரித்தானியர் கைது

துபாயில் ஈரானிய ஏவுகணைகளைப் படம் பிடித்த பிரித்தானியர் கைது

அமெரிக்கா மறுப்பு

ஈரான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்ததாவது, தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க போர்க்கப்பலும் அதனுடன் இருந்த தாக்குதல் குழுவும் “அதிவேகமாக அந்தப் பகுதியை விட்டு விலகிச் சென்றதாக” காணப்பட்டதாகும்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் கூடுதல் தகவல்கள் அரசுத் தொலைக்காட்சியால் வழங்கப்படவில்லை. இதற்கு முன்பும் Islamic Revolutionary Guard Corps இந்தக் கப்பலை தாக்கியதாகக் கூறியிருந்தது.

ஆனால் அப்போது அமெரிக்க பென்டகன் தெரிவித்ததாவது, ஏவப்பட்ட ஏவுகணைகள் அந்தக் கப்பலுக்கு அருகிலும் வரவில்லை என்று. ஈரானின் தகவல்கள் வெளிவந்த உடனே அமெரிக்கா அதை மறுத்தது.

அமெரிக்க United States Central Command (CENTCOM) வெளியிட்ட புகைப்படத்தில் USS Abraham Lincoln போர்க்கப்பல் தொடர்ந்து Operation Epic Fury நடவடிக்கையை ஆதரித்து கடலில் செயல்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்

CBS News வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று ஈரானிய கப்பலை நோக்கி 5-inch 54-calibre Mark 45 என்ற தானியங்கி கடற்படை பீரங்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம் | Us Warship Abraham Lincoln Hit By Iran Strike

இந்தத் துப்பாக்கிச் சூடு எந்தக் கப்பலில் இருந்து நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட தகவலின்படி, அமெரிக்க தாக்குதல்கள் பல முறை ஈரானிய கப்பலைத் தவறவிட்டதாக கூறப்படுகிறது.

அவை எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடுகளா அல்லது தாக்குதல் நோக்கத்திலானவையா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

மேலும் USS Spruance மற்றும் USS Michael Murphy உள்ளிட்ட இரண்டு destroyer கப்பல்கள் USS Abraham Lincoln உடன் இணைந்து Arabian Sea பகுதியில் செயல்பட்டு வருகின்றன.

ஈரானுக்கு பயந்து ஓடிய அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல்! பற்றி எரியும் ஹார்முஸ் நீரிணை

ஈரானுக்கு பயந்து ஓடிய அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல்! பற்றி எரியும் ஹார்முஸ் நீரிணை

மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US