நேட்டோ கனவை உக்ரைன் மறக்க வேண்டும்: கட்டுபாடுகளை அடுக்கிய ட்ரம்ப்
நேட்டோ படையில் இணையும் திட்டத்தை, கனவை உக்ரைன் மறந்துவிடலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடனான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு பெரிய அதிர்ச்சி ஒன்றை அமெரிக்கா அளித்துள்ளது.
மேலும் உக்ரைனுக்கு கொடுத்த பல கோடி நிதிகளை திருப்பி பெற புதிய திட்டமொன்றையும் அமெரிக்கா வகுத்துள்ளது.
50 சதவிகிதப் பங்கு
உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த செலவினங்களை ஈடுசெய்யும் விதமாக அந்நாட்டுக்கு கிடைக்கும் வருவாயில் 50 சதவிகிதப் பங்கை அமெரிக்கா கோரி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைனை அமெரிக்காவின் பொருளாதார காலனியாக மாற்றும் வகையில் இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளதாக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா சார்பாக உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை ஒன்றில் இது தொடர்பான கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |