வெனிசுலாவின் திடீர் பதற்றம்! தங்கம், வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்: நிபுணர்கள் எச்சரிக்கை
2026 ஆம் ஆண்டு புவிசார் பதற்றத்தை தோற்றுவித்துள்ள வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதல் காரணமாக எதிர்வரும் நாட்களில் கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் பாரிய மாற்றம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய வெள்ளி ஏற்றுமதியாளர்களான பெரு மற்றும் சாட் நாடுகள் தங்கள் வெள்ளி ஏற்றுமதிக்கு பயன்படுத்தும் கடல்வழிப் பாதையை அமெரிக்கா-வெனிசுலா நெருக்கடி பாதித்துள்ளது.
விலைகளின் பாரிய மாற்றம்
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் பாரிய மாற்றம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இருப்பினும், வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள வர்த்தக அமர்வுக்கு பின்னர் எதிர்பார்த்த வலுவான ஆரம்ப கொள்முதல் இருக்காது எனவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை சற்றுப் பாதிக்கப்படலாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலக சந்தையில் தங்கத்தின் விலை
இந்த தாக்குதலால் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் பதற்றம் அதிகரித்து, அடிப்படை உலோகங்கள், தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி பொருட்கள் போன்றவற்றிற்கு நிச்சயமற்ற நிலை உருவாகும் என்பதுடன்,விலைகள் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கமைய, உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் $4,345.50-ல் முடிவடைந்த நிலையில், திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கும் போது $4,380-ஐ எட்டலாம்.
அதேபோல், COMEX வெள்ளி ஒரு அவுன்ஸுக்கு $75 மற்றும் $78-ஐயும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு $62 மற்றும் $65-ஐயும் தொடலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.