ரஷ்யாவில் இருந்து உடன் வெளியேறுங்கள் - அமெரிக்க அவசர அறிவிப்பு
ரஷ்யாவில் தங்கி இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை வெளியேறுமாறு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கை தொடங்கியது இருந்து பெரும்பாலான உலக நாடுகளுடனான தொடர்பை இழந்து ரஷ்யா தனிமையடைந்து வருகிறது. மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகள் மற்றும் பயணத்தடைகள் விதித்துள்ளனர்.
ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு
இதற்கிடையில், டென்மார்க்கிற்கு அருகிலுள்ள நோர்ட் ஸ்ட்ரீம் (Nord Stream) 1 மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2-ல் இருந்து மர்மமான மூன்று கசிவுகள் நீருக்கடியில் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் சக்திவாய்ந்த வெடிப்பு பதிவு செய்யப்பட்டது.
இந்த வெடிப்புக்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் திட்டமிட்ட செயல் என்று குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவில் தங்கி இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இராணுவ சேவைக்கு கட்டாயப்படுத்தலாம்
பலரும் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் கூட்ட நெரிசலான எல்லை சோதனைச் சாவடிகள் காணப்படுவதாகவும் இதனால் நாட்டை விட்டு வெளியேறுவது மிகவும் கடினமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா அமெரிக்க குடியுரிமையை ஒப்புக்கொள்ள மறுக்கலாம், அமெரிக்க தூதரக உதவிக்கான அணுகலை மறுக்கலாம். ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கலாம், மேலும் இரட்டைப் பிரஜைகளை இராணுவ சேவைக்கு கட்டாயப்படுத்தலாம் எனவும் அறிவிப்பாட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவில் வசிப்பவர்கள் அல்லது பயணம் செய்பவர்கள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் , என்று தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.