ஈரானை சுற்றிவளைக்கும் அமெரிக்காவின் பாரிய இராணுவ நகர்வு.. திரைமறைவில் ட்ரம்பின் இரகசிய திட்டம்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள "போர் நிறுத்த" முயற்சிக்கு பின்னால் ஒரு பாரிய இராணுவ வியூகம் ஒளிந்திருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமைக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
தற்போதுள்ள தகவல்களின்படி, ஏற்கனவே மத்திய கிழக்கில் நிலைகொண்டுள்ள 50,000 அமெரிக்க வீரர்களுடன் மேலதிகமாக 5,000 மெரைன் படை வீரர்கள் இணைந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலக்கெடு
இந்நிலையில், ட்ரம்ப் தற்காலிகமாக வான்வழித் தாக்குதல்களை நிறுத்தி வைத்துள்ளார். "வெள்ளிக்கிழமைக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், எங்கள் விருப்பப்படி குண்டுவீச்சு தொடரும்" என ட்ரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்கையில், அமெரிக்கா வெறும் வான்வழித் தாக்குதலுடன் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்பது பென்டகனின் நகர்வுகள் மூலம் தெரியவருவதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடக்கும் இந்த மூலோபாய மையத்தைக் கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அழிப்பதற்கான இரகசியத் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன.
கார்க் தீவு (Kharg Island)
சுமார் 2,200 மெரைன் வீரர்களைச் சுமந்து வரும் இந்த பிரம்மாண்ட போர்க்கப்பல் வெள்ளிக்கிழமை வளைகுடாப் பகுதியை வந்தடையவுள்ளது.

ஈரான் கடும் எதிர்ப்பு மத்தியஸ்தர்களிடம் பேசியுள்ள ஈரான், ட்ரம்பின் பேச்சுவார்த்தை அழைப்புகளைத் தாங்கள் நம்பவில்லை எனத் தெரிவித்துள்ளது.
"ஏற்கனவே இருமுறை ஏமாற்றப்பட்டுள்ளோம், மீண்டும் ஏமாறத் தயாரில்லை" என ஈரான் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஈரான் முன்வைக்கும் முக்கிய நிபந்தனைகள்: அமெரிக்கத் தாக்குதல்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
போர் நிறுத்தம் என்பது நிரந்தரமானதாக இருக்க வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டுமானால், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்க வேண்டும்.