பசிபிக் கடற்பரப்பில் அமெரிக்கா - இந்தியாவுடன் பாரிய இராணுவ பயிற்சி!
கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண திட்டத்தில் (HADR) பிராந்திய பாதுகாப்பு பங்காளிகளை ஒன்றிணைத்து, பாரிய இராணுவ பயிற்சியை இலங்கை நடத்தவுள்ளது. செப்டம்பர் 8 முதல் 12 வரை பசிபிக் ஏஞ்சல் 2025 என்ற திட்டத்திற்கு அமைய பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தப் பயிற்சியில் அமெரிக்க பசிபிக் படைகள், ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படை, ஜப்பான் விமான தற்காப்புப் படை, இந்திய விமானப்படை, மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் பங்களாதேஷ் விமானப்படை ஆகியவை இலங்கை விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவத்துடன் பங்கேற்கும் என கூறப்பட்டுள்ளது.
123 வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் உட்பட மொத்தம் 300 பணியாளர்கள், தேடல் மற்றும் மீட்பு (SAR), வான்வழி மருத்துவ வெளியேற்றம், பெருமளவிலான விபத்து மறுமொழி, வான்வழி நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமானப்படை தளம்
அத்தோடு, எட்டு பொருள் நிபுணர் பரிமாற்றங்கள் (SMEEs) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் சீனன்குடா மற்றும் அம்பாறையில் கூடுதல் பயிற்சியும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க விமானப்படை இரண்டு C-130J விமானங்களை நிலை நிறுத்தவுள்ள அதே நேரத்தில் இலங்கை பெல் 412, B-212 மற்றும் கிங் ஏர் 350 விமானங்களை வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை கடற்படை திறந்த நீர் SAR பயிற்சிகளை ஆதரிக்க கடல்சார் தளங்களையும் வழங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா



