இலங்கை செய்த தவறே அமெரிக்காவின் வரிக்கான காரணம்- சஜித் பிரேமதாஸ விமர்சனம்
அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு குறைந்த வரிகளை நிர்ணயிக்க இலங்கை தவறியமை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது கண்டிப்பை வெளியிட்டுள்ளார்.
பலவீனமான மற்றும் தன்முனைப்பு பேச்சுவார்த்தைகளே இதற்கான காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதிப் பொருட்கள்
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது, 30 வீத வரியை அறிவிடவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தநிலையில், தன்முனைப்பு மற்றும் பலவீனமான பேச்சுவார்த்தைக்காக செலுத்தும் விலையாக இந்த வரி அமைந்துள்ளது.
என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார் இதன் காரணமாக இப்போது கிட்டத்தட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதியின் எதிர்காலம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிக்கலான, உலக பேச்சுவார்த்தைகளுக்கு பாடப்புத்தக நிபுணர்களை நம்பியிருப்பதன் ஆபத்துகளையும் அவர் இந்த விடயத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
