இலங்கையின் எரிசக்தி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கவுள்ள அமெரிக்கா (Photo)
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும், அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி ஒத்துழைப்பு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்றைய தினம் (08.11.2023) நடந்துள்ளது.
அமெரிக்காவின் ஆதரவு
இதன்போது இலங்கையின் எரிசக்தி தொடர்பான சீர்திருத்தங்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என ஸ்கொட் நேதன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எரிசக்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வலுசக்தி திறன் மேம்படுத்தல் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
Discussed the ongoing electricity sector reforms, green energy plans & financing available for green energy projects. I thank HE @USAmbSL & @DFCgov for the commitments towards SL & the Energy Sector. https://t.co/3qbb2ehQBS
— Kanchana Wijesekera (@kanchana_wij) November 8, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



