மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அமெரிக்காவின் படைபலம் இலத்தீன் அமெரிக்காவில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று(5) மாலை நடைபெறும் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தை ஆதரிப்பதாகவும் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து பெய்ஜிங்கின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் மீண்டும் வலியுறுத்தினார், மேலும் மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

வெனிசுலா அரசாங்கத்துடன் அரசாங்கம் நேர்மறையான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பைப் பேணி வருவதாகவும், சர்வதேச நிலைமை மாறினாலும், சீனா லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் நல்ல நட்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கத் தாக்குதலால் சீனப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டதாக பெய்ஜிங்கிற்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.