உக்ரைன் மீது ட்ரம்ப் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி நடவடிக்கை
அமெரிக்கா உக்ரைனின் சில செயற்கைக்கோள் படங்களை அணுகுவதற்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான மெக்சர் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஓவல் அலுவலகத்தில் இடம்பெற்ற ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி மோதலுக்குப் பிறகு அமெரிக்க - உக்ரைன் உறவுகள் முறிந்தன.
இதைத் தொடர்ந்து, உக்ரைனுடனான உளவுத்துறை பகிர்வை இடைநிறுத்த அமெரிக்கா முடிவு செய்திருந்த நிலையிலேயே தற்போது இவ்வாறான ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி மோதல்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனமான மெக்சர், பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் படங்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.
அவற்றில் ஒன்று குளோபல் என்ஹான்ஸ்டு ஜியோயின்ட் டெலிவர் (GEGD) திட்டம் ஆகும், இது அமெரிக்க அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்ட உயர்தர படங்களை பயனர்களுக்கு அணுக அனுமதிக்கிறது.
அதன்படி, "GEGD-யில் உக்ரேனிய கணக்குகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது," என்று மெக்சர் நிறுவனம் அறிவித்துள்ளது.
முக்கிய கருவி
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஒரு பகுதியான தேசிய புவிசார் - புலனாய்வு நிறுவனம், "உக்ரைனுக்கு ஆதரவளிப்பது தொடர்பான நிர்வாகத்தின் உத்தரவுக்கு இணங்க" இந்த இடைநீக்கம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
போரின் போது செயற்கைக்கோள் படங்கள் ஒரு முக்கியமான கருவியாகும், ஏனெனில் இது படைகள் தங்கள் போட்டியாளர்களைப் பற்றிய உளவுத்துறை தகவல்களைச் சேகரிக்க அனுமதிக்கிறது.
இந்நிலையில், அமெரிக்கா எடுத்துள்ள இந்த திடீர் தீர்மானம், உக்ரைனுக்கு மிகப்பெரிய சவாலாக அமைய வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 51 நிமிடங்கள் முன்

முதல்முறையாக அணுசக்தி கப்பலை வெளிக்காட்டிய வடகொரியா! அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தல் என தென்கொரியா பதற்றம் News Lankasri

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவி சீரியல் புகழ் மான்யா ஆனந்த்... எந்த தொலைக்காட்சி தொடர்? Cineulagam
