இலங்கைக்கு அருகில் நடந்த தாக்குதல்! அமெரிக்காவால் இலங்கைக்கு ஆபத்தா..!
ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதல் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள் நிலையில் இலங்கை அதிலுள்ளவர்களை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்டர் தெரிவித்தார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர்,
இதனால் அமெரிக்காவால் இந்த விடயம் எப்படி பார்க்கபடும் என்ற பிரச்சினையுள்ளது.
ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருள்தான் இலங்கையிடம் உள்ளது என்று கூறப்படும் நிலையில் மற்ற நாடுகளிடமிருந்து பெற வேண்டிய தேவையுள்ளது.
மேலும், இந்த தாக்குதல்களில் அமெரிக்காவிற்கு நன்மைகள் கிடைத்துள்ளன.ஏனென்றால் 14 நாடுகளை ஈரான் தாக்கியுள்ளது.
அதாவது அமெரிக்காவின் இராணுவ தளங்கள் உள்ள நாடுகளை தாக்கியுள்ளது. எனவே இந்த 14 நாடுகளும் ஈரான் மீது போர் தொடுக்கலாம்.
மேலும் இஸ்ரேலும், அமெரிக்காவும் எதிர்பார்க்காத அளவில் ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடல் தொடர்பான விரிவான விளக்கங்களை கீழுள்ள காணொளியில் காண்க..