நிலைகுலையும் அமெரிக்க பங்குச் சந்தை : ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டொலான்ட் ட்ரம்பின் (Donald Trump) புதிய வரி விதிப்புகள் உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது.
இது கோவிட் தொற்று பரவலுக்கு பின்னர் உலக நிதி சந்தையில் ஏற்பட்ட மிகப் பெரிய அதிர்ச்சியாக பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் ட்ரம்பின் வரி விதிப்பு அறிவிப்புக்கு பின் அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்ட நிலையில், சா்வதேச பொருளாதாரச் சூழல் அடியோடு மாறி வருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடன் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்ப் அளித்த பதில்
அமெரிக்காவின் முக்கிய வர்த்தக குறியீடான S&P 500 இண்டெக்ஸ் 4.8 வீதமாக சரிந்துள்ளதுடன் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள முக்கிய சந்தைகளை விட அதிக பாதிப்புக்களைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில், ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் பங்குச் சந்தைகள் 2ஆவது நாளாகவும் சரிவடைந்துள்ளன.
இந்த சூழலில் ட்ரம்ப் நிருபர்களிடம் அளித்த பேட்டி ஒன்றின் போது விரைவில் சந்தைகள் மற்றும் பங்குகள் ஏற்றம் பெறப்போகின்றன. நாடு ஏற்றம் பெறப்போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரி விதிப்பு அறிவிப்பு உலகளவில் சந்தைகளை உலுக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்
அமெரிக்காவை பயன்படுத்தும் ஏனைய நாடுகள்
வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவில் தங்கள் தயாரிப்புகளை தயாரிக்க விரும்பும் நிறுவனங்களிடமிருந்து டிரில்லியன் கணக்கான டொலர்கள் முதலீடு நமது நாட்டிற்கு வரும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு ஒப்பந்தத்தை முடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று பல நாடுகள் பார்க்க விரும்புகின்றன.
யாராவது அற்புதமான சலுகையை கொடுக்கத் தயாராக இருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.
அமெரிக்காவை மற்ற நாடுகள் நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றன. அதை நிறுத்தவே விரும்புகிறோம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
