இலங்கைக்கு அருகில் தாக்கப்பட்ட கப்பலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட சிக்கல்
இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகில் தாக்கி அழிக்கப்பட்ட ஈரானிய கப்பலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்கு கராப்பிட்டிய மருத்துவமனையில் போதிய இடமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தற்காலிகமாக பல உடல்களை பிரேத அறைக்கு வெளியே குளிரூட்டும் செயன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொள்கலன்களில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட உடல்கள்
இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற ஈரானின் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்டது. இந்தநிலையில், தாக்குதலுக்கு இலக்கான கப்பல் தொடர்பில் கிடைத்த அவசர சமிக்ஞையைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த தாக்குதலில் 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்ட 80இற்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் பலரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான சடலங்களை பிரேத அறையில் வைக்க முடியாத காரணத்தினால் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் அந்த சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன பலரைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 21 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam