உலக சந்தையில் எரிபொருள் விலையைக் குறைக்க அமெரிக்கா மேற்கொண்டுள்ள தீர்மானம் (Video)
அதிகரித்துவரும், எரிசக்தி மற்றும் எரிபொருட்களின் விலைகளைக் குறைக்கும் நோக்கில், 50 மில்லியன் எரிபொருள் பீப்பாய்களை தமது இருப்புகளிலிருந்து சந்தைக்கு விடுவிக்கவுள்ளததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் பிரித்தானியா முதலான ஏனைய, மிகப்பெரிய எரிபொருள் நுகர்வு நாடுகளுக்கு இணையாக அமெரிக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒபெக் அமைப்பு நாடுகளிடம், எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்ச்சியாக கோரியிருந்தார்.
எனினும், கட்டம் கட்டமாக உற்பத்தியை அதிகரிப்பதற்கு, ஒபெக் அமைப்பு ஒப்பந்தத்தில் இணங்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதேநேரம், இந்தியாவும் 5 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய்யை தமது இருப்புகளிலிருந்து விடுவிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,