ஈரானிய வீரர்களை திருப்பி அனுப்பாதீர்கள்! இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கிறதா அமெரிக்கா

Donald Trump United States of America Sri Lanka Government Iran Iran-Israel War
By Rakesh Mar 07, 2026 08:40 AM GMT
Report

இலங்கைக் கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்ட ஈரான் கடற்படையினரை மீண்டும் ஈரானுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா, இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இரகசிய உள்நாட்டுத் தகவல் பரிமாற்றங்களை மேற்கோள் காட்டி இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது.

புழுக்களுடன் பொரித்த கோழி வழங்கிய கடை உரிமையாளருக்கு அபராதம் விதிப்பு

புழுக்களுடன் பொரித்த கோழி வழங்கிய கடை உரிமையாளருக்கு அபராதம் விதிப்பு

அமெரிக்காவின் அழுத்தம்

அதன் முக்கிய விவரங்கள் வருமாறு,

"கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பதில் தூதுவர் ஜேன் ஹொவெல், இலங்கை அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது, ஈரான் கடற்படையினரை மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

ஈரானிய வீரர்களை திருப்பி அனுப்பாதீர்கள்! இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கிறதா அமெரிக்கா | Us Puts Heavy Pressure On Sri Lanka

'IRIS Dena' கப்பலில் இருந்து உயிர் தப்பிய 32 பேர் மற்றும் 'IRIS Booshehr' கப்பலில் இருந்த 208 ஊழியர்களையும் இவ்வாறு ஈரானுக்கு அனுப்பக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் கடற்படையினர் தமது நாட்டுக்குத் திரும்பினால், அவர்கள் அந்நாட்டு அரசால் அரசியல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே அமெரிக்கா இந்த அழுத்தத்தைப் பிரயோகிப்பதாகக் கூறப்படுகின்றது.

மௌனம் காக்கும் தூதரகம்

இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதுவரிடமும் ஜேன் ஹொவெல் இது குறித்துக் கருத்துப் பகிர்ந்துள்ளார்.

இதன்போது, கொழும்பில் தங்கவைக்கப்பட்டுள்ள ஈரான் கடற்படையினரை ஈரானுக்கு அனுப்பும் திட்டம் தற்போது இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய வீரர்களை திருப்பி அனுப்பாதீர்கள்! இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கிறதா அமெரிக்கா | Us Puts Heavy Pressure On Sri Lanka

அத்துடன், அந்தப் பணியாளர்களை ஈரானுக்குச் செல்லவிடாது தடுத்து, அவர்கள் வேறு நாடுகளுக்குச் செல்வதை ஊக்குவிக்க ஏதேனும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதா என இஸ்ரேலியத் தூதுவர் அமெரிக்கத் தரப்பிடம் வினவியுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய வீரர்களை பொறுப்பேற்ற இலங்கை அரசின் பதில்

இதேவேளை, ஈரான் கப்பல் விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஈரான் கடற்படையினரை இலங்கை பொறுப்பேற்றமை ஒரு ‘மனிதாபிமானக் கடமை’ எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், அமெரிக்காவின் அழுத்தம் குறித்து ஜனாதிபதி செயலகமோ அல்லது வெளிவிவகார அமைச்சோ இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த வித கருத்தையும் வெளியிடவில்லை.

ஈரானிய வீரர்களை திருப்பி அனுப்பாதீர்கள்! இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கிறதா அமெரிக்கா | Us Puts Heavy Pressure On Sri Lanka

இதேவேளை, இலங்கைக் கடற்பரப்பில் அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினரின் சடலங்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புமாறு ஈரான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது என்று தெரிவித்துள்ள சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹம்சக்க விஜேமுனி, அதற்கான கால எல்லை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் காலி கடற்பரப்பிலிருந்து 19 கடல் மைல் தொலைவில் வைத்து ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

இதன்போது ஈரான் கடற்படையினர் பலர் உயிரிழந்தனர். 32 பேர் காயங்களுடன் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மற்றுமொரு ஈரான் போர்க்கப்பலான 'IRIS Booshehr' இலங்கைக் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டதுடன், அதில் இருந்த 208 ஈரான் கடற்படையினர் வெலிசரை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சற்றுமுன்னர் ஈரானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சற்றுமுன்னர் ஈரானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

யாழ். படைத் தலைமையகம் ஒருபோதும் அகற்றப்படாது! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாதுகாப்பு அமைச்சு

யாழ். படைத் தலைமையகம் ஒருபோதும் அகற்றப்படாது! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாதுகாப்பு அமைச்சு


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US