தீபாவளியை கொண்டாட தயாராகும் ஜோ பைடன் - அறிவிப்பு வெளியானது
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த ஆண்டு தீபாவளியை வெள்ளை மாளிகையில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், நிகழ்வின் விவரங்கள் மற்றும் தன்மை குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரேன் ஜீன்-பியர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அறிவிப்பு
கடந்த ஆண்டைப் போலவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தீபாவளியைக் கொண்டாட திட்டமிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள எங்களிடம் திகதி இல்லை, எனினும், ஜனாதிபதி இந்தியா மற்றும் இந்திய அமெரிக்கர்களுடன் ஒரு கூட்டாண்மையைப் பார்ப்பதால் இந்த நிகழ்வு மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மேரிலாந்து ஆளுநர் லாரன்ஸ் ஹோகன் அக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளார். புஷ் நிர்வாகம் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.