கருப்பின கைதியை சரமாரியாக தாக்கும் அமெரிக்கா பொலிஸார்!
அமெரிக்கா - நியூ யோர்க்(New York) சிறையில் கருப்பின கைதி ஒருவரை பாதுகாப்பு அதிகாரிகள் சரமாரியாக தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியானது, ஏனைய சில அதிகாரிகளில் உடையில் பொருத்தப்பட்ட “பொடி கேம்” கமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், குறித்த கைதி தாக்கப்பட்ட அடுத்த நாளே உயிரிழந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விசாரணை
தாக்குதலுக்கு உள்ளான கைதி 43 வயதான ரொபர்ட் ப்ரூக்ஸ் என்றும், கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி சிறையில் வைத்து அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைவிலங்கிடப்பட்ட அவர் மருத்துவ பரிசோதனை மேசையில் அமரவைக்கப்பட்டு, அவரது வாயில் பொலிஸார் துணி போன்ற எதையோ திணிப்பது காணொளியில் பதிவாகியுள்ளது.
அதன்பின் அதிகாரிகள் புரூக்ஸின் முகம் மற்றும் இடுப்பில் அடிப்பதும், ஒரு கட்டத்தில், ஒரு அதிகாரி காலணியை பயன்படுத்தி ப்ரூக்ஸின் வயிற்றில் தாக்குவதும், மற்றொருவர் அவரை கழுத்தைப் பிடித்து மேசையில் தள்ளுவதும் காணொளியில் வெளியாகியுள்ளது.
காணொளி - https://x.com/repartoahorro/status/1872801393058447868
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |