ட்ரம்ப் விதித்த 25 வீத வரி.. இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்குமா..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள 25 வீத வரி, இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என்று எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது ஈரானிலிருந்து எரிபொருளை கொள்வனவு செய்யவில்லை. எனவே, ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் விதித்துள்ள வரி இலங்கையை பாதிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடன் ஒப்பந்தம்
அத்துடன், முறையான விலைமனுக்கோரல் நடைமுறைகளின் கீழ் தற்போது இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து இலங்கை எரிபொருள் கொள்வனவு செய்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரானுடன் தனியாக எந்த ஒப்பந்தமும் இலங்கை அரசாங்கம் செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தமது மொத்த எரிபொருள் தேவையின் 90வீதத்துக்கு மேற்பட்டதை இறக்குமதி செய்து வருகின்றது.
அது மாத்திரமன்றி, ஆண்டுதோறும் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை, சுமார் 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam