அமெரிக்க பிரதிநிதிகள் இலங்கை விஜயம்
அமெரிக்க இராஜாங்க செயலகத்தின் ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட் நேப்யூ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இவர் ஆகஸ்ட் 8 - 9 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இவருடன் யு.எஸ். இராஜாங்க செயலகத்தின் ஊழல் எதிர்ப்பு பகுப்பாய்வாளர் டிலான் அய்கன்ஸ் அவர்களும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இவர் இலங்கையில் இருக்கும் காலத்தில், அரசாங்கம், எதிர்க்கட்சி, சர்வதேச நாணய நிதியம், தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்களைச் சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் மற்றும் ஊழல் முயற்சிகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




