ஹோர்முஸை முழுதாக ஆக்கிரமிக்கும் அமெரிக்கப் படை.. ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முயற்சிக்கும் அனைத்து கப்பல்களையும் முற்றுகையிட அமெரிக்க கடற்படை ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் ஒரு நீண்ட பதிவில், "கூட்டம் நன்றாக நடந்தது, பெரும்பாலான விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, ஆனால் உண்மையில் முக்கியமான ஒரே விடயமான அணுசக்தி விடயம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு சட்டவிரோதக் கட்டணம் செலுத்திவிட்டு சர்வதேசக் கடற்பரப்பில் பயணிக்கும் எந்தவொரு கப்பலும் தடுத்து நிறுத்தப்படும் என்றும், ஈரானால் கடலில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அமெரிக்கக் கடற்படை அகற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை தோல்வி..
போர்நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமை குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், இது அமெரிக்காவை விட ஈரானுக்கே மோசமான செய்தி என்று கூறினார்.
ஈரான் தனது அணு ஆயுதக் கனவுகளைக் கைவிடத் தயாராக இல்லாததே பேச்சுவார்த்தை முறிவிற்குக் காரணம் என அமெரிக்கத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அதேசமயம், அமெரிக்காவின் "நியாயமற்ற கோரிக்கைகள்" மற்றும் அதன் மீது நம்பிக்கையில்லாததுமே பேச்சுவார்த்தை தோல்விக்குக் காரணம் என ஈரானியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
உலக எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹோர்முஸ் நீரிணை மீதான முழுக் கட்டுப்பாடு, போர் நஷ்டஈடு மற்றும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள தனது சொத்துக்களை விடுவித்தல் போன்ற கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
பெப்ரவரி 28 முதல் நீடிக்கும் இந்தப் போரினால் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், ட்ரம்பின் இந்த முற்றுகை அறிவிப்பு பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam