நகை - பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்களை வீட்டில் வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை
புத்தாண்டு விடுமுறை நாட்களில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் சமூக ஊடகப் பாவனையில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
பண்டிகை காலங்களில் வீடுகளை விட்டு வெளியேறி செல்பவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களை அடையாளப்படுத்தும் வகையில் சமூக வளைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காணொளிகளைபதிவேற்றுவதை தவிர்க்கவும்
அதாவது, நிகழ்நேரத் தகவல்களையோ அல்லது வருகைப் பதிவுகளையோ பகிர்வதை தவிர்க்குமாறும் பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இவ்வாறான பதிவுகளை வெளியிடும்போது வீட்களில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்து திருட்டுச்சம்பவங்கள் இடம்பெறுவதற்கு வழியமைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் தங்களின் பயணப் புகைப்படங்களையும் காணொளிகளையும் உடனடியாக பதிவேற்றுவதை தவிர்த்து பயணம் நிறைவுற்ற பின்னர் பகிருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam