அமெரிக்க உயர் படையதிகாரி இலங்கைக்கு விஜயம்
அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைத் தளபதி (INDOPACOM) அட்மிரல் சாமுவேல் ஜே. பப்பாரோ, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதாக, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
தனது பயணத்தின் போது, அட்மிரல் பப்பாரோ, இலங்கையின் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் இராணுவத் தலைவர்களுடன் இணைந்து, நீடித்த அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்துவார் என்று தூதரகம் குறிப்பிடுள்ளது.
அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாடு
அத்துடன், இந்தோ - பசுபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கான அமெரிக்க தொலைநோக்குப் பார்வையையும் அவர் பகிர்ந்து கொள்வார்.
இந்த நிலையில், இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இந்தோ - பசுபிக் பகுதியில் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கும் அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை தளபதி பப்பாரோவின் வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அமெரிக்க தூதரகம், அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |