அமெரிக்காவின் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்றில் பலியான 18,000 மாடுகள்...!
அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தால் குறித்த பண்ணையிலிருந்த 18,000 மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடி விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை எனவும் இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய கால்நடை இறப்பு
இதன்போது தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த பலமணிநேரம் போராடியுள்ளனர்.
பண்ணை தீப்பற்றி எரிந்ததில் ஏற்பட்டுள்ள இழப்பு 36 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குகள் நலக் கழகத்தின் தகவலின்படி, இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய கால்நடை இறப்பு இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.