இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 3 அமெரிக்க கடற்படையினர் பலி
அமெரிக்க இராணுவ உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 20 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இராணுவ பயிற்சியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5 பேரின் நிலைமை கவலைக்கிடம்
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளின் பங்களிப்புடன் இந்த இராணுவப் பயிற்சி நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் திவி தீவுகளை அண்மித்த பகுதியில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தினர் குழுவொன்றை ஏற்றிச் சென்ற குறித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், விபத்தில் மூன்று அமெரிக்க கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் காயமடைந்த 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A V-22 Osprey helicopter, carrying 22 US Marines, has tragically crashed off the coast of Australia. Three US marines have been killed and 19 injured in the fatal accident.
— FL360aero (@fl360aero) August 27, 2023
? V-22 Osprey Picture for representation only. pic.twitter.com/NYaOETqP93
