போர்நிறுத்த விவகாரம்! பகைமை மறந்து இராஜதந்திரங்களை வகுக்கும் ரஷ்யா - அமெரிக்கா
சவூதி அரேபியாவில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த உக்ரைனுடனான போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அமெரிக்காவும் ரஷ்யாவும் நான்கு கொள்கைகளுக்கு உடன்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கொள்கைகளை ரூபியோ பின்வருமாறு விளக்கியிருந்தார்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா
1. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் உள்ள எங்கள் தூதரகங்களின் செயல்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு, தற்போதைய பாதையில் நாம் தொடர்ந்து செல்ல இராஜதந்திர வசதிகள் காணப்பட வேண்டும்.
2. உக்ரைனுடனான மோதல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவும், பணியாற்றவும் எங்கள் தரப்பில் இருந்து ஒரு உயர்மட்டக் குழுவை நியமிக்கப் போகிறோம்.
3. உக்ரைனில் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் விளைவாக ஏற்படக்கூடிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு இரண்டையும் பற்றி விவாதிக்கவும் சிந்திக்கவும் தொடங்குவோம்.
4. உற்பத்தித் திறன் மிக்கதாக முன்னேற்றத்தை உறுதிசெய்ய தொடர்ந்து ஈடுபடுவோம்.” என மார்கோ சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார வாய்ப்பு
குறிப்பாக இந்த பேச்சுவார்த்தையில் மார்கோ ரூபியோ , அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி உதவியாளர் யூரி உஷாகோவ் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.
உக்ரைனில் போர் முடிவுக்கு வந்தால் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் சிறந்த பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
பொது நலன் சார்ந்த பிரச்சினைகளில் புவிசார் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரஷ்யர்களுடன் பங்காளியாக அமெரிக்காவிற்கு நம்பகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் ரூபியோ கூறியுள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பல வருட பகைமைக்குப் பிறகு ஒரு "மிகப்பெரிய சாதனை" என்று ரஷ்யாவின் இறையாண்மை செல்வ நிதியத்தின் தலைவரும், சவுதி அரேபியாவின் ரஷ்ய பேச்சுவார்த்தைக் குழுவின் ஒரு அங்கத்தவரான கிரில் டிமிட்ரிவ் கூறியுள்ளார்.
அத்தோடு, அமெரிக்க-ரஷ்யா உறவுகளில் முன்னேற்றம் சிறந்த அடித்தளத்திலிருந்து தொடங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
You May like this..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கிளீன் தையிட்டி..! 2 நாட்கள் முன்

வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை: ஜேர்மனியில் நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் ஆச்சரிய முடிவுகள் News Lankasri

Rasipalan: இன்னும் ஒரு வாரத்தில் அதிர்ஷ்டத்தை கொட்டப்போகும் செவ்வாய் பெயர்ச்சி- உங்க ராசி இருக்கா? Manithan

சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் வளைகாப்பு புகைப்படங்கள்.. இத்தனை பிரபலங்கள் வந்தார்களா.. Cineulagam
