பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை அமெரிக்கா சந்திக்கலாம்! ஈரான் விடுத்த அதிரடி எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையினை தொடர்ந்து அமெரிக்கா மீது அழிவுகரமான தாக்குதல்களை தொடங்குவதாக ஈரான் இராணுவம் இன்று எச்சரித்துள்ளது.
மேலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நிரந்தர அவமானத்தையும், வருத்தத்தையும், சரணடைதலையும் சந்திக்கும் வரை போரை தொடரப்போவதாகவும் ஈரான் சபதம் செய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம்! அமெரிக்கர்கள் ஈராக்கை விட்டு வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை
அமெரிக்காவின் உளவுத்தகவல் முழுமையற்றது
"கௌரவமான மற்றும் முஸ்லிம் தேசமான ஈரானுக்கு எதிராக அவர்கள் தொடங்கிய ஆக்கிரமிப்புக்கு எதிரிகள் விலை கொடுக்க வேண்டும்" “எங்கள் இராணுவ ஆற்றல் மற்றும் எங்கள் ஆயுதங்கள் குறித்த அமெரிக்காவின் உளவுத்தகவல் முழுமையற்றது என்று இராணுவ செய்தித்தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி கூறியுள்ளார்.

எங்களின் உண்மையான ஆற்றலைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களின் முக்கியமான ஏவுகணை உற்பத்தித் தளங்கள், நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்கள், நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணுப் போர் மற்றும் சிறப்பு ஆயுதங்களை நீங்கள் அழித்துவிட்டதாக எண்ண வேண்டாம்.
அமெரிக்காவிற்கு காலக்கெடு
நீங்கள் தாக்கியதாக நினைக்கும் எங்கள் தளங்கள் முக்கியமற்றவை. எங்களின் முக்கிய இராணுவ உற்பத்தி, உங்களுக்குத் தெரியாத மற்றும் உங்களால் ஒருபோதும் அடைய முடியாத இடங்களில் நடைபெறுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரண்டு வாரங்களுக்குள் அல்லது மூன்று வாரங்களுக்குள்" அமெரிக்கா இந்த மோதலில் இருந்து விலகக்கூடும் என்று கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு மோதலில் உச்சக்கட்ட பதற்றம் - ஈரானுக்கு எதிராக திரும்பியுள்ள வளைகுடா நாடுகளின் கடும் எச்சரிக்கை
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam