அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைகள் விரைவில் - வெளியான தகவல்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கான இடம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச அணுசக்தி முகாமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.
அணுசக்தியுடன் மட்டும் நின்றுவிடாது
அவரது கூற்றுப்படி, இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதியில் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடைபெறலாம்.

நிகழ்ச்சி நிரல் அணுசக்தியுடன் மட்டும் நின்றுவிடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை, ஏவுகணைத் திட்டம், ஈரானுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஆகியவையும் விவாதப் பொருள்களாக இருக்கும்" என்று க்ரோஸி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மார்ச் 23 அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் "ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான" பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அறிவித்ததையும், இது தொடர்பாக ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகைக்கான காலக்கெடுவை அவர் நீடித்ததையும் நினைவு கூரலாம்.
இதற்கு முன்னர் தனது இறுதி எச்சரிக்கைக்கு இணங்கவில்லை என்றால் ஈரானின் எரிசக்தி வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.
இருப்பினும், வொஷிங்டனுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என தெஹ்ரான் மறுத்தது.
மூன்று அணுசக்தி நிலையங்களை அகற்ற
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக ஒரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
தெஹ்ரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதும், அந்நாடு அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று வொஷிங்டன் கூறியது.

கிடைத்த தகவல்களின்படி, ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகளை முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும், மூன்று அணுசக்தி நிலையங்களை அகற்ற வேண்டும் என்றும் அமெரிக்கா கோருகிறது.
இருப்பினும், பல ஆண்டுகளாக யுரேனியத்தைச் செறிவூட்டும் தனது உரிமையைத் தக்கவைத்து வருவதாகவும், சமீபத்திய தாக்குதல்களின் போது அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் ஈரான் கூறியுள்ளது.
வெள்ளைக்கும் பச்சைக்கும் இடையிலான யுத்தம் நிறைவடையுமா..! 50 நிமிடங்கள் முன்
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam