மியான்மருக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா! ஜோ பைடன் கடும் எச்சரிக்கை
மியான்மர் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் மியாமரில் ஜனநாயக அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி அதிகாரத்தை கைப்பற்றிய இராணுவம், அரசு தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரச தலைவர்களையும் சிறைபிடித்தது.
இந்நிலையில், மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இராணுவ தலைமைக்கு நிதியுதவி வழங்குவதற்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அதன்படி, மியான்மருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1 பில்லியன் டொலர் நிதியை அமெரிக்கா தடை செய்துள்ளது.
இருப்பினும், சுகாதாரம் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் நலத்திட்டங்களுக்கான நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் ஒப்படைக்காவிட்டால், அமெரிக்க அரசாங்கம் புதிய தடைகளை விதிக்க நேரிடும் என மியான்மர் இராணுவத்துக்கு ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தி உள்ளிட்ட இன்னும் பல வெளிநாட்டு செய்திகளை “இப்படிக்கு உலகம்” தொகுப்பில் காணலாம்.