ஈரானிய சாம்ராஜ்ஜியத்தின் ஆணிவேரை குறிவைத்த அமெரிக்கா - அதிரடியாக இலக்கை அறிவித்தது IRGC!

United States of America United Arab Emirates Iran Middle East
By Sajithra Mar 14, 2026 11:16 AM GMT
Report

அமெரிக்கா, ஈரானின் கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, ஈரானிய புரட்சிகர காவற்படை (IRGC), ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் சட்டபூர்வ இலக்குகள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் படி, ஈரான் தனது தேசிய இறையாண்மையையும் நிலத்தையும் பாதுகாப்பதற்கான உரிமையின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

மிக இரகசியமான ஆயுதக்கிடங்கை காட்சிப்படுத்தி அதிரடி காட்டும் ஈரான்... Strait of Hormuz வழியான கப்பல்களுக்கு இலக்கு!

மிக இரகசியமான ஆயுதக்கிடங்கை காட்சிப்படுத்தி அதிரடி காட்டும் ஈரான்... Strait of Hormuz வழியான கப்பல்களுக்கு இலக்கு!

வெளியேற அறிவுறுத்து.. 

இதன்படி, அமெரிக்க ஏவுகணைகள் புறப்பட்டதாக கூறப்படும் துறைமுகங்கள், துறைமுகத் தளங்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள இடங்களை இலக்காகக் கொள்ளும் உரிமை தமக்குள்ளதாக IRGC தெரிவித்துள்ளது.

ஈரானிய சாம்ராஜ்ஜியத்தின் ஆணிவேரை குறிவைத்த அமெரிக்கா - அதிரடியாக இலக்கை அறிவித்தது IRGC! | Us Hideouts Uae Legitimate Targets Kharg Island

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துறைமுகங்கள், கப்பல் நிறுத்துமிடங்கள் மற்றும் அமெரிக்க இராணுவம் தொடர்புடைய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் விலகிச் செல்லுமாறும் IRGC எச்சரித்துள்ளது.

இதன்மூலம் பொதுமக்களுக்கு சேதம் ஏற்படாமல் தவிர்க்க முடியும் எனவும் இது தொடர்பில் IRGC விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பெர்ஷியன் நீரிணை பகுதியில் அமைந்துள்ள கார்க் தீவிலிருந்து நடைபெறும் எண்ணெய் ஏற்றுமதி தற்போது தடையின்றி தொடர்கிறது என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் குறியில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை

அமெரிக்காவின் குறியில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை

வரலாற்றுச் சின்னங்கள்.. 

மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் கார்க் தீவு உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈரானிய சாம்ராஜ்ஜியத்தின் ஆணிவேரை குறிவைத்த அமெரிக்கா - அதிரடியாக இலக்கை அறிவித்தது IRGC! | Us Hideouts Uae Legitimate Targets Kharg Island

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்த தீவை ஈரானின் “மகுட நகை” என குறிப்பிட்டிருந்தாலும், புகழ்பெற்ற ஈரானிய எழுத்தாளர் Jalal Ale-Ahmad பல ஆண்டுகளுக்கு முன்பு இதை “பெர்ஷியன் நீரிணையின் அனாதை முத்து” என வர்ணித்துள்ளார்.   

சுமார் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த தீவு, ஈரானின் Bushehr கடற்கரையிலிருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

நீளம் சுமார் 8 கிலோமீட்டரும் அகலம் 5 கிலோமீட்டரும் கொண்ட இந்த சிறிய தீவு, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை செயலாக்கும் முக்கிய மையமாக உள்ளது.

இந்த தீவில் உள்ள எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், ஏற்றுமதி துறைமுகங்கள் மற்றும் குழாய் அமைப்புகள் ஈரானின் எண்ணெய் துறையின் முக்கிய நரம்பு மையமாக செயல்படுகின்றன. 

Aboozar Oil Field, Forouzan Oil Field மற்றும் Dorood Oil Field ஆகிய கடல்சார் எண்ணெய் களங்களிலிருந்து கச்சா எண்ணெய் முதலில் கார்க் தீவுக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் கடலடிப் குழாய்கள் மூலம் செயலாக்க மையங்களுக்கு அனுப்பப்படுகிறது.

 2,500 வீரர்களுடன் USS Tripoli

அதேபோல் Ahvaz Oil Field, Marun Oil Field மற்றும் Gachsaran Oil Field போன்ற ஈரானின் பெரிய எண்ணெய் களங்களிலிருந்தும் எண்ணெய் நேரடியாக கார்க் தீவின் சேமிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது.

ஈரானிய சாம்ராஜ்ஜியத்தின் ஆணிவேரை குறிவைத்த அமெரிக்கா - அதிரடியாக இலக்கை அறிவித்தது IRGC! | Us Hideouts Uae Legitimate Targets Kharg Island

ஆண்டுக்கு சுமார் 95 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இந்த வசதிகள் மூலம் கையாளப்படுகின்றன. Royal United Services Institute-இல் பணியாற்றும் ஆற்றல் ஆய்வாளர் Petras Katinas கூறுகையில், இந்த தீவு ஈரான் அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்கான முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.

இந்த தீவின் கட்டுப்பாட்டை ஈரான் இழந்தால், நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்திக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், எண்ணெய் துறைக்கு அப்பாற்பட்டும், இந்த தீவு பல வரலாற்று மற்றும் மத முக்கியத்துவங்களையும் கொண்டுள்ளது. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிர் முகமது தலம், பழமையான சமயக் கல்லறைகள், சாசனிய கால கல்லறைகள், கிறிஸ்தவ சமாதிகள் மற்றும் 1747ஆம் ஆண்டு கட்டப்பட்ட டச்சு கோட்டை போன்ற வரலாற்றுச் சின்னங்களும் இங்கு காணப்படுகின்றன.

முன்னதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்த தீவை குறித்து மிகுந்த கவனத்துடன் அணுகி வந்த நிலையில், தற்போது தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமெரிக்க பாதுகாப்புத்துறை, USS Tripoli என்ற கடற்படை தாக்குதல் கப்பலை சுமார் 2,500 கடற்படை வீரர்களுடன் இந்த பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈராக்கிலும் பதற்றம்! அமெரிக்க தூதரக அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் ஏவுகணை தாக்குதல்

ஈராக்கிலும் பதற்றம்! அமெரிக்க தூதரக அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் ஏவுகணை தாக்குதல்

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US